விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துகிறது தமிழக அரசு

விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துகிறது தமிழக அரசு

1 mins read

சென்னை: விவசாயிகளின் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகவை மூலம் நேரடி யாக பொதுமக்களுக்கு விற்கும் புதிய முயற்சியைத் தமிழக வேளாண்துறை தொடங்கியுள் ளது. விவசாயிகளின் உற்பத் தியை இருமடங்காக்கி, அதன் மூலம் அவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் விவசா யிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் உற்பத்திசெய்யும் தர மான விளைபொருட்களையும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட் களையும் நேரடியாக சந்தைப்படுத்தும் முயற்சிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் ஏலக்காய், மிளகு போன் றவை கட்டுப்படியான விலையில் விற்கப்படுகின்றன.