விதிமீறல்: ஆம்னெஸ்டி அலுவலகத்தில் சோதனை

விதிமீறல்: ஆம்னெஸ்டி அலுவலகத்தில் சோதனை

2 mins read

பெங்களூரு: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் விதிமீறல் இடம்பெற்றதாகக் கூறி பெங்களூரில் உள்ள 'ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல் இந்தியா' அலு வலகத்தில் அமலாக்கத் துறை யினர் பத்து மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். பெங்களூரு அலுவலகத்தில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்குத் தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அந்த நிறுவனத்திற்கு உரிய இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. லண்டனை மையமாகக் கொண்ட இந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் 150 நாடுகளில் சுமார் 70 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறைச் சட்டப் பிரிவு அளித்த தகவலின்படி இந்தச் சோதனை இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து அறிக்கை வெளி யிட்ட அமலாக்கத்துறை, "கடந்த 2011=12ஆம் ஆண்டில் ஆம் னெஸ்டி இன்டர்னேஷல் இந்தியா, அதன் பிரிட்டன் அலுவலகத்தில் இருந்து வெளிநாட்டு நிதியைப் பெற அனுமதி கோரியது.

"வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு நிறுவனங் களின் எச்சரிக்கையை அடுத்து நிதியுதவி கோரும் பெரும்பாலான ஆவணங்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது. "ஆனால், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரை வேட் லிமிடெட் என்ற பெயரில் இன்றைய தேதி வரை அனுமதி பெறாமல் ரூ.36 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

"இந்தத் தொகையைப் பெற்ற தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதால் சோதனை நடத்தப்பட் டது," என்று தெரிவித்துள்ளது. அண்மையில் இந்த நிறுவனத் தின் கூட்டத்தில் காஷ்மீர் பிரச் சினை தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்தச் சோதனையும் நடைபெற்றது.

ஆனால், "அரசாங்கத்தைக் விமர்சனம் செய்ததால்தான் அம லாக்கத் துறையின் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக அமைப்புகளிடம் பயத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது," என ஆம்னெஸ்டி இந்தியா அமைப்பு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.