சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது வழக்குப்பதிவு

சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது வழக்குப்பதிவு

1 mins read

புதுடெல்லி: சபரிமலை விவகாரம் குறித்து சர்ச்சைக் கருத்து வெளி யிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்மிருதி இரானி, "சபரி மலை ஐயப்பன் கோயில் தொடர் பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அமைச்சர் என்ற முறையில் வரவேற்கிறேன். "அதேசமயம் தனிப்பட்ட முறையில் எனது கருத்தை இங்கு தெரி விக்கிறேன். சபரிமலை கோயி லுக்குச் சென்று வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. "ஆனால் அவமரியாதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. மற்ற வர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் நண்பர்கள் வீட்டுக்குச் செல்ல மாட்டீர்கள்தானே?

"அதே போன்ற மரியாதை கடவுளின் வீடான கோயிலுக்குச் செல்லும் போதும் இருக்க வேண் டும்," எனக் கூறினார். இப்பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஸ்மிருதி இரானியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பீகார் மாநிலம் சித்தமாரியைச் சேர்ந்த சரோஜ் குமாரி என்ற பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார்.