ருசியான உணவு சமைத்தவருக்கு வெகுமதி அளித்த அமைச்சர்

ருசியான உணவு சமைத்தவருக்கு வெகுமதி அளித்த அமைச்சர்

2 mins read

பெங்களூரு: மிகவும் ருசியாக மீன் உணவு சமைத்த உணவக தலைமைச் சமையற்காரருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி அளித்த கர்நாடக அமைச்சர், அவருக்குத் தன் கையாலேயே உணவை ஊட்டியும் விட்டார். கர்நாடக மாநிலத்தின் உணவு, வழங்கல் துறை அமைச் சரான பி. ஸமீர் அகமது கானின் இச்செயலால் சமையற்காரர் ஹனீஃப் முகம்மது இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அமைச்சர் ஸமீர் அகமது கான் மங்களூரு நகருக்கு அலு வல் நிமித்தமாக ஆய்வு மேற் கொண்டார். அப்போது, 'ஃபிஷ் மார்க்கெட்' என்ற உணவு விடுதிக்கு மதிய உணவிற்காகச் சென்றார்.

அப்போது 'பாம்பிரட்', 'அஞ் சல்' ஆகிய மீன் உணவுகளைச் சாப்பிட்ட அமைச்சர் ஸமீர் அக மது அதன் ருசியில் சொக்கிப் போனார். உடனே அதைச் சமைத்த ஹனீஃப் முகம்மதுவைச் சந்தித்து மனம் மகிழப் பாராட்டி உணவை ஊட்டியும் விட்டார். மேலும், திரு ஹனிஃபின் புனித ஹஜ் பயணத்திற்கு ஏற் பாடு செய்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். தான் முற்றிலும் எதிர்பாராத இந்த நிகழ்வால் சமையல் கலைஞர் ஹனீஃப் மகிழ்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதற்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் எனது உணவைச் சாப்பிட்டு இருக்கிறார் கள். அவர்கள் பாராட்டு மட்டும் தான் தெரிவித்தனர். "ஆனால், அமைச்சர் ஸமீர் வெகுமதியும் அளித்து ஹஜ் பய ணத்துக்கும் உதவுவதாகக் கூறி யது இன்ப அதிர்ச்சி," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.