வடஇந்தியாவில் யமுனை ஆற்றின் நடுவே மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த டெல்லியின் 'சிக்னேச்சர்' பாலம் நேற்று அதி- காரபூர்வமாகத் திறக்கப்பட்டது. டெல்லியின் வடகிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் யமுனை ஆற்றின் குறுக்கே இந்தப் பாலத்தை டெல்லி சுற்றுலா, போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனம் அமைத்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட இந்தப் பாலத்திற்கு 2007ல் டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. இதையடுத்து 2010ஆம் ஆண்டில் 'காமென்வெல்த்' விளை- யாட்டுப் போட்டிகளுக்கு முன்ன தாக கட்டுமானப் பணிகளை முடிக்கவேண்டும் எனத் திட்ட மிடப்பட்டிருந்தது.
ஆனால் பல்வேறு தடங்கல்- களுக்குப் பின்னர் தற்போது இந்தப் பாலத்தின் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்தப் பாலத்தின் நடுவே பிரம்- மாண்டமாக 154 மீட்டர் உயரத்தில் கோபுரம் ஒன்று வைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இந்தியாவில் ராட்சத தூண்கள், கம்பிவடங்கள் மூலம் இணைக்கப்பட்ட முதல் பாலம் இது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாலத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்ததாக தெரிவிக்கப்- பட்டது. இதையடுத்து இந்த 'சிக்னேச்சர்' பாலம் இன்று முதல் பொதுமக்கள், வாகனங்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட உள்ளது.

