இயந்திர கோளாற்றால் இருமடங்காக உயர்ந்த சம்பளம்

இயந்திர கோளாற்றால் இருமடங்காக உயர்ந்த சம்பளம்

1 mins read

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதச் சம்பளமாக இரு மடங்கு அதிகமான சம்பளம் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தைக் கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். தீபாவளிப் பண்டிகைக்காக கூடு தலாக ஒரு மாதச் சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது என ஊழியர்கள் மகிழ்ந்தனர். ஆனால் வங்கியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகக் கூடுதலாக ஒரு மாதச் சம்பளம் செலுத்தப்பட்டது என விசார ணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கூடுதலாகச் செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந் தனர். ஊழியர்களுக்குக் கூடுத லாக ஒருமாதச் சம்பளமாக 40 முதல் 50 கோடி ரூபாய் தவறுதலாகச் செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. இயந்திரக் கோ ளாறுக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.