சென்னை: வெளிமாநிலத்தவர்க ளுக்கு வாசலை திறந்துவிட்டு, தமிழக அரசு தமிழர்களைப் புறந் தள்ளுவதாக நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் இனி தமிழில் வினாக்கள் கேட்கப் படாது என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம் என அறிக்கை ஒன்றில் அவர் விமர்சித்துள்ளார். "தமிழக அரசானது உடனடி யாக இவ்விவகாரத்தில் தலை யிட்டு தமிழிலேயே வினாத்தாள் களை வழங்குவதற்குரிய ஏற்பாடு களை விரைந்து செய்ய வேண்டும். அதுவரைத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும். தமிழர்களுக்கு அநீதி இழைக்க முனைந்தால் அனைவரையும் திரட்டி போராட் டங்களை முன் னெடுப்போம்.," என சீமான் எச்சரித்துள்ளார்.
தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசு: சீமான் புகார்
1 mins read

