உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 2100 பேர் மீது வழக்குப் பதிவு

உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 2100 பேர் மீது வழக்குப் பதிவு

2 mins read

சென்னை: தீபாவளி பண்டிகைக் காக சென்னையில் இருந்து 7.37 லட்சம் பேர் சொந்த ஊருக்குப் பயணம் செய்துள்ளனர். தீபாவளிக்காக இந்தாண்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 13,634 பேருந்து கள் இயக்கப்பட்டன. நான்கு நாட்களாக இயக்கப்பட்ட இந்தப் பேருந்துகளில் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு பேருந்து வசதி சிறப்பாக இருந்ததாக பொது மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகள் வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,100 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதி மன்றம் தீபாவளி அன்று குறிப் பிட்ட நேரங்களில் மட்டுமே பட் டாசுகள் வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை மீறி பல்வேறு பகுதிகளில் பலர் பட்டாசுகள் வெடித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவானது. பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வது தவறானது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறி உள்ளார்.

இந்நிலையில் தீபாவளி அன்று சென்னையில் காற்று மாசு குறைவாக இருந்ததாக மத்தியமாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் தீபாவளி அன்று காற்று மாசு குறியீடு 65 புள்ளிகளாகப் பதி வானது. இது டெல்லியில் 349 புள்ளிகளாக அபாய அளவில் இருந்ததாகவும் வாரியம் தெரிவித் துள்ளது. இதற்கிடையே தீபாவளி அன்று தமிழகத்தில் வழக்கத்தை விட ரூ.70 கோடிக்கு கூடுதலாக மது விற்பனை நடந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் அதிகாலை முதலே ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 200 வார்டுகளில் உள்ள பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் 19 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசுகளால் ஏற்பட்டுள்ள குப்பைகளின் அளவு குறைந்திருப்பதாக மாநகராட்சி ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.