மதுரை: குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண் டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் சற்றே களை யிழந்து காணப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மதுரையைச் சேர்ந்த ஊமச்சிக்குளம் கிராம மக்கள் தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்தனர். தங்களுக்கான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால் நேற்று முன்தினம் அவர்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இக்கிராமத்தில் கடந்த 18 ஆண்டுகளாக அருந்ததியர் சமூ கத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை வீட்டுமனைப் பட்டா, மின்சார இணைப்பு ஆகியவை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தைக் கண்டிக் கும் வகையில் அவர்கள் தீபாவளியைப் புறக்கணித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லை: தீபாவளியைப் புறக்கணித்த மக்கள்
1 mins read

