சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மாணவி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது சிறுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. படம்: தமிழக தகவல் ஊடகம்
மாணவி படுகொலை: விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
1 mins read
-

