போதைப்பொருளுடன் பிடிபட்ட 25 மாணவர்கள் இடைநீக்கம்

போதைப்பொருளுடன் பிடிபட்ட 25 மாணவர்கள் இடைநீக்கம்

1 mins read

சென்னை: சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு சில மாணவர்கள் தங்கள் கல்வியைப் பாடப் புத்தகங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் போதைப் பொருட்களையும் வைத்திருந்தது பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நீலாங்கரை அரு கிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு மாண வர்கள் பான் போதைப் பொருள் கொண்டு வந்ததாக 25 மாண வர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர்.

பத்து நாட்களுக்கு மேலாகியும் மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று பள் ளிக்கு வந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம், வெளியே அனுப்பி வெயிலில் நிற்க வைத் ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத் தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளி ஆசிரியர்க ளோடு வாக்குவாதத்திலும் ஈடு பட்டனர். நீலாங்கரை காவல் ஆய்வாளர் கள் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி, மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல அனு மதிக்கப்பட்டனர்.