புதுடெல்லி: இந்தியாவின் தலை நகர் டெல்லியில் காற்றுத் தூய் மைக்கேடு தீபாவளிக்குப் பின் அபாய அளவையும் தாண்டி படு மோசமான நிலையை எட்டியது. அங்கு தீபாவளிக்கு முன்பே காற்றுத்தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பலரும் வெடி, மத்தாப்பு கொளுத் தியதால் காற்றுத் தரம் மிகவும் மோசமடைந்து ஆபத்தான நிலை யைக் கடந்துவிட்டது. டெல்லி ஆனந்த் விஹாரில் நேற்றுக் காலை நிலவரப்படி 999, அமெரிக்க தூதரக பகுதி மற்றும் சாணக்யபுரி பகுதியில் 459, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டுத் திடலில் 999 என அபாயகரமான அளவில் காற்று மாசுபாடு அடைந்துள்ளது.
டெல்லியில் நேற்றுக் காலை யில் சாலைகள் தெரியாத அள விற்குப் புகை மூடியிருந்தது. புகைமூட்டம் அடர்ந்து காணப் பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாயினர். முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியும் முகமூடி அணிந்துகொண் டும் பலரும் சென்றனர். புதுடெல்லியில் காற்றுத்தரம் தொடர்ந்து கெட்டு வருகிறது.
இதற்கு அண்டை மாநிலங் களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படு வதும் வாகனப் புகையும் கார ணம் என்று தெரிவிக்கப்படுகிறது. காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகைக் காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள், வீடுக ளில் வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக்கூட நிறுத்து வது பேன்றவை அவற்றில் அடங் கும். ஆனாலும் காற்று மாசு குறைந்தபாடில்லை. இதனிடையே, தீபாவளிக்கு உச்ச நீதிமன்றம் விதித்த வெடி வெடிப்பதற்கான தடைகள் பல இடங்களிலும் மீறப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

