'சர்கார்' படத்துக்கு எதிராக அமைச்சர்கள் கண்டனம்

'சர்கார்' படத்துக்கு எதிராக அமைச்சர்கள் கண்டனம்

2 mins read

சென்னை: குடும்பம், பேய், நகைச் சுவை படங்களைப் போலவே அவ் வப்போது வெளியாகும் அரசியல் படங்களின் கதைக்களங்களும் ஒரு சில தருணங்களில் மக்கள் மத்தியில் சூடான விமர்சனத்தைக் கிளப்பிவிடும். இது குறித்தே பலரும் பேசிக்கொண்டிருப்பர். இப்படி ஒரு சூழ்நிலையை இப்போது சர்ச்சையுடன் எதிர் நோக்கி வருகிறது விஜய் நடித் துள்ள 'சர்கார்' திரைப்படம். முழுக்க முழுக்க தமிழக அர சியலை அவமதிக்கும் நெடியுடன் 'சர்கார்' படம் எடுக்கப்பட்டுள்ள தாகப் புகார் கூறி அமைச்சர்கள் பலரும் படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 'சர்கார்' பட நாயகன் விஜய், தயாரிப்பாளர் கலாநிதிமாறன், திரையரங்க உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 'சர்கார்' திரைப்படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து சி.வி. சண்முகத்தை அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களி டம் நேற்று பேசிய சி.வி.சண்முகம், "படத்தில் அரசு வழங்கும் இல வசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற் றுள்ளன. அரசை அவமதிக்கும் காட்சியில் நடித்துள்ள விஜய், கலாநிதிமாறன் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும்," என்றார். இந்நிலையில் படத்தில் சர்ச் சைக்குரிய வசனங்கள் இருப்ப தாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரும் குற்றம் சாட்டியுள்ளனர்.