இந்தியாவிலேயே முதல்முறையாக திருச்சியில் திறந்தவெளி நூலகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக திருச்சியில் திறந்தவெளி நூலகம்

1 mins read

திருச்சி: நூல்களை வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்களிடம் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் 2,000 புத்தகங்களுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகத்தை திருச்சி யில் அமைக்க உள்ளனர். இந்த நூலகத்தில் உள்ள புத்தகத்தை யார் வேண்டு மானாலும் விதிமுறைப்படி எடுத் துச்செல்லலாம். ஆனால், அவர் கள் தங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு நூலை இங்கு வைத்த பின்னர்தான் புதிய நூலை எடுத்துச்செல்ல முடியும்.

வெளிநாடுகளில் 'லிட்டில் ப்ரீ லைப்ரரி' என்றழைக்கப்படும் திறந்தவெளி நூலகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பதைப் போன்ற நூலகத்தைத் திருச்சி மாநகரப் பகுதியில் அமைக்கும் பணியைத் தொடங்கி யிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட புத்தூர் காலனி பகுதியில் திறந்தவெளி நூலகம் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

"கிவ் ஏ புக்- டேக் ஏ புக் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நூலகத்தை ஏற்படுத்துகிறோம். சமூக வலைத்தளங் களிலேயே முழு கவனத்தையும் செலுத்தும் இளைஞர்கள் மத்தி யில், நூல்கள் வாசிக்கும் பழக் கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் இந்தத் திறந்தவெளி நூலகத்தை அமைக்கிறோம். "நிச்சயம் இந்த நூலகம் மாநகர மக்களுக்கும் இளை ஞர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகவே இருக்கும்," என்று கூறுகிறார் திருச்சி மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன்.