தேர்வில் சாதித்த 96 வயது மாதுக்கு மடிக்கணினி பரிசு

தேர்வில் சாதித்த 96 வயது மாதுக்கு மடிக்கணினி பரிசு

1 mins read

கேரளாவில் எழுத்தறிவு திட்டத் தேர்வில் சாதனை படைத்த 96 வயது மூதாட்டிக்கு மாநில கல்வித் துறை சார்பில் மடிக்- கணினி ஒன்று பரிசாக வழங்கப்- பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இளமைக்- காலத்தில் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக 'அக் ஷரலக் ஷம்' என்னும் பெயரில் எழுத்தறிவு திட்டத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இவ்வாண்டு நடைபெற்ற இறுதித் தேர்வில் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டியான கார்த்தியாயினி அம்மா, 100க்கு 98 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார்.

இந்த முதிர்ந்த வயதிலும் கணினி கற்றுக்கொள்ள இவர் பேரார்வம் கொண்டுள்ளார். தொழில்நுட்பத்தைப் பயன்- படுத்துவதில் இவரது தன்னம்பிக் கையையும் விடாமுயற்சியையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், எழுத்தறிவு திட்டத்தில் முதலிடம் பிடித்த கார்த்தியாயினி அம்மாவின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப் படுத்தும் வகையில் அவருக்கு மாநில கல்வித் துறை சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பரிசை கேரள கல்வி அமைச்சர் சி.ரவிந்தரநாத் நேற்று முன்தினம் வழங்கினார்.