காட்சிகள் நீக்கம்: 'சர்கார்' விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு

காட்சிகள் நீக்கம்: 'சர்கார்' விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு

1 mins read

சென்னை: 'சர்கார்' பட விவகாரம் பெரிதான நிலையில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் அப்படக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தணிக்கைக் குழுவால் அனு மதிக்கப்பட்ட பின்னர் ஒரு திரைப் படத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவது கண்டனத்துக்கு உரி யது என நடிகர் ரஜினி தெரி வித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தில் அரசியலையும் நாட்டு நடப்புகளையும் விமர்சிக் கும் பல்வேறு வசனங்கள், காட்சி கள் இடம்பெற்றுள்ளன. இதனால், ஆளும் அதிமுக தரப்புக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தில் முன்பு ஜெய லலிதா முதல்வராக இருந்தபோது மக்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்தும் காட்சி இடம்பெற் றுள்ளது. இந்நிலையில் 'சர்கார்' படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்படம் திரையிடப்பட்ட திரை யரங்குகளுக்கு முன்பு அதிமுக வினர் நேற்று இரண்டாவது நாளாகத் திரண்டுவந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பல அடி உயர பிரம்மாண்ட பதா கைகளைக் கீழே சாய்த்தனர்.

'சர் கார்' சுவரொட்டிகள் கிழித்தெறியப் பட்டன. விவகாரம் பெரிதான நிலையில் திரையுலகப் பிரமுகர் கள் சிலர் 'சர்கார்' படத்தின் தயாரிப்புத் தரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்குவது என முடிவானது. அதன்படி நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் 'சர்கார்' படத் தின் இரவுக் காட்சி ரத்தானது. இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தமது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.