இடைத்தேர்தலில் போட்டியிடுவது நல்லது: சசி கூறிய அறிவுரை

இடைத்தேர்தலில் போட்டியிடுவது நல்லது: சசி கூறிய அறிவுரை

1 mins read

பெங்களூரு: மறைந்த தலைவர்கள் செயல்படுத்திய திட்டங்களை விமர் சிப்பது அநாகரிகமான செயல் என அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று காலை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் பெங்களூர் சென்ற அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக ஆட்சியாளர்கள் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் நோக் கத்துடன் போராட்டங்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

"மத்திய அரசு மூலம் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் முன்பு சோதனை நடந்தது. அப்போதெல்லாம் ஆளுங்கட்சியினர் போராடவில்லை. இப்போது 'சர்கார்' படத்துக்கு எதிராக மட்டும் தீவிர மாகப் போராடுகிறார்கள்," என்றார் தினகரன். இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் தைரியமாக எதிர்கொண்டு போட்டியிட வேண்டுமென சசிகலா கூறியதாகக் குறிப்பிட்ட அவர், 20 தொகுதி இடைத்தேர்தலைச் சந்திப்பது நல்ல முடிவு என்றும் சசிகலா பாராட்டியதாகத் தெரிவித்தார். இடைத்தேர்தலில் அமமுக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் தினகரன் மேலும் குறிப்பிட்டார்.