மிரட்டும் 'கஜா' புயல்: கனமழைக்கு வாய்ப்பு

மிரட்டும் 'கஜா' புயல்: கனமழைக்கு வாய்ப்பு

2 mins read

சென்னை: வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித் துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென் றுள்ள மீனவர்கள் இன்று மாலைக் குள் கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கிடையே இந்தப் புதிய புயலானது சென்னை நோக்கி நகர்வதாக வெளியான தகவல் காரணமாக சென்னைவாசிகளிடம் அச்சம் நிலவுகிறது. எனினும் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 930 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் புயலுக்கு 'கஜா' என பெயர் சூட் டப்பட்டுள்ளது. இந்தப் பெயரைத் தாய்லாந்து தேர்வு செய்துள்ளது. வரும் 14ஆம் தேதியிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 80 முதல் 90 கிமீ வரை பலமான காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் வங்கக் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப் படும் என்றும் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "கஜா புயல் காரணமாக வட தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புண்டு. குறிப்பாக, 14, 15ஆம் தேதிகளில் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் கடுமையாக இருக்கும்.

"வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய் யும். தீவிர புயலாக மாறினாலும் கரையைக் கடக்கும்போது அதன் தீவிரம் குறையும் என கணிக்கப் பட்டுள்ளது," என்றார் பாலச் சந்திரன். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்தாண்டு இதுவரை வழக்கமான அளவில் மழைப் பொழிவு உள்ளது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதற்கிடையே மழையால் ஏற் படக்கூடிய பிரச்சினைகளை சமா ளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாங்களும் தனிப்பட்ட வகையில் மேற் கொண்டு வருவதாக சென்னை வாசிகள் தெரிவிக்கின்றனர்.