சென்னை: தமிழகம் முழுவதும் எச்1என்1 காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் இக்காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 'பருத்தி வீரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரவணனுக்கும் (வயது 50) எச்1என்1 காய்ச் சல் இருப்பது பரிசோதனை வழி தெரியவந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், காய்ச்சல் குணமடைந்து பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கப்போவதாகவும் சரவணன் கூறி னார். இதற்கிடையே அவரது குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சரவணனுக்கு எச்1என்1
1 mins read

