தவறாக பொத்தானை அழுத்திய விமானி

தவறாக பொத்தானை அழுத்திய விமானி

1 mins read

புதுடெல்லி: டெல்லியிலிருந்து கண்டஹார் செல்லும் விமானத்தில் ஆபத்துக் கால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி விளக்கம் அளித்த விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், "விமானத்திலுள்ள "கடத்தல் தடுப்பு' அவசரகால பொத்தானை விமானி தவறுதலாக அழுத்தியதால் தேசிய பாதுகாப்புப் படை உள்பட பல்வேறு அரசு துறைகளுக்கு தகவல் பறந்தது. தேசிய பாதுகாப்புப் படையின் அதிரடி வீரர்கள் அந்த விமானத்தைச் சுற்றி வளைத்தனர்," என்று கூறினர். பின்னர் விமானியின் தவறு என்பது தெரியவந்தது. இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு விமானம் கண்ட ஹாருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஏரியானா-ஆப்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் 124 பயணிகளும் 9 ஊழியர்களும் இருந்தனர்.