பெரியாருக்குச் சாதிப்பட்டம்: மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

பெரியாருக்குச் சாதிப்பட்டம்: மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

1 mins read

சென்னை: காலஞ்சென்ற தந்தை பெரியாருக்கு சாதிப்பட்டம் சூட்டி யது அயோக்கியத்தனம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய தேர்வு ஒன்றுக்கான வினாத்தாளில், 'திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியது யார்?' என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. அதன் கீழே ஈ.வெ. ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை ஆகிய நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு, சரியான பதிலைத் தேர்வு செய்யப் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1928இல் தம் பெயரில் ஒட்டி இருந்த சாதி அடையாளத்தை நீக்கியவர் ஈ.வெ. ராமசாமி. அப்படிப்பட்டவருக்கு சாதி அடை யாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத் தேர்வில் அதை அடையா ளப்படுத்துவதும் அயோக்கியத் தனம் என்று ஸ்டாலின் காட்டத்து டன் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணமானவர்களை அரசு பணிநீக்கம் செய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் வேறு சில தலைவர் களும் பிரமுகர்களும் அரசுத் தேர்வாணையத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.