சிவகாசி: பட்டாசுகள் தயாரிப்பது, விற்பது வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. இதன் எதிரொலியாக பட் டாசுக்குப் பெயர் பெற்ற சிவகாசி யில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதனால் 8 லட்சம் தொழிலா ளர்கள் வேலை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய் தியாளர்களிடம் பேசிய சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கப் பொதுச்செயலர் மாரியப்பன், உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்த னைகள் காரணமாக பிற மாநி லங்களிலும் 500க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். புதிய நிபந்தனைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயிரம் பட்டாசு ஆலைகளுக்கு மூடு விழா
1 mins read

