அரசு மரியாதையுடன் டெய்சி அடக்கம்

1 mins read
db85e61b-9298-4915-a6a8-a72754798ab9
-

கர்நாடகா: சிக்கமங்களூர் மாவட்டத்தில் காவல் துறைக்கு 7 ஆண்டுகளாக சிறந்த சேவை செய்து வந்த டெய்சி என்ற நாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது. இந்த நாயை சிக்கமங்களூர் காவல் துறையினர் அரசு மரியாதை யுடன் குண்டுகள் முழங்க அடக்கம் செய்தனர். ஏழரை வயதுடைய பெண் டாபர்மேன் நாய் டெய்சி கடந்த 7 ஆண்டுகளாக சிக்கமங்களூர் மாவட்ட ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்தது. சிறந்த மோப்ப சக்தியுடைய டெய்சி இதுவரை 105 குற்றம் நடக்க இருந்த இடங்களையும் 8 கொலை சம்பவங்கள் குறித்த குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியுள்ளது.