ரஃபேல் விவகாரம்: உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக்கூடாது என்கிறது மத்திய அரசு

ரஃபேல் விவகாரம்: உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக்கூடாது என்கிறது மத்திய அரசு

1 mins read

புதுடெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந் துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கு குறித்த விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதத்துடன் நடந்தது. அப்போது மத்திய அரசு, "ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நிபுணர்கள்தான் ஆய்வு செய்ய வேண்டுமே தவிர உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக்கூடாது," என்று வாதிட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிந்த நிலையில், இதுகுறித்த தீர்ப்பு வழங்கப்படும் தேதியைக் குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

முன்னதாக ஒப்பந்தத்தில் திருட்டு நடைபெற்றதை பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், ராகுல் காந்தி பொய் யான குற்றச்சாட்டுகளைச் சுமத் துவதாகவும் பிரதமர் பதவியில் அமர்வதற்காகவே அவர் இப்படி தொடர்ந்து பொய் பேசி வருவதாக வும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் பொதுநல வழக்குத் தொடுத்தனர்.