சேலம் சிறை: சமையல் செய்து சாப்பிடும் கைதிகள்

1 mins read

சேலம்: சிறையில் உள்ள கைதிகள் தங்கள் அறையில் சமையல் செய்து சாப்பிடுவதாக புதுப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சேலம் மத்திய சிறையில் டிஐஜி அறிவுடைநம்பி அதிரடி சோதனை மேற் கொண்டார். அப்போது சமையல் செய்வதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ள சேலம் மத்திய சிறையில் பல கைதிகள் கைபேசிகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதாக முன்பே புகார் எழுந்தது.

இதற்குச் சிறைத் துறை போலிசார் உடந்தை யாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அச்சிறை யில் அடைக்கப்பட்டுள்ள வசதி படைத்த கைதிகள் தங்களுக்கான இரவு உணவை தாங்களே சமைத்துச் சாப்பிடுவதாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் கிடைத் தது. இதையடுத்து கோவை வட்டார சிறைத்துறைத் தலைவரான அறிவுடைநம்பி திங்கட்கிழமை இரவு மத்திய சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது சிறைக்குள் ஏராளமான விறகுக் கட்டை கள் இருப்பது தெரியவந் தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட அவர், சமை யல் செய்து சாப்பிடும் கைதிகள் யார் என்பது குறித்து அவர் தீவிர விசா ரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.