சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய 'ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை உடனடியாக அழிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இப்புத்தகம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. அப்போதே இதன் பிரதிகள் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. நெடுமாறனும் கைதானார். இதையடுத்து நீதிமன்றத்தை அணுகினார் நெடுமாறன். நேற்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையின்போது 'ஈழம் சிவக்கிறது' புத்தகத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அப்புத்தகத்தின் பிரதிகளை உடனடியாக அழிக்கவேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
நெடுமாறன் எழுதிய புத்தகத்தை அழிக்க நீதிமன்றம் உத்தரவு
1 mins read

