காற்றுத் தூய்மைக்கேட்டால் விலங்குகளுக்கும் பாதிப்பு

1 mins read

தீபாவளிக்கு முன்னதாக டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் காய்ந்த பயிர்கள் எரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மேற்குறிப்பிட்ட பயிர் எரிப்புச் சம்பவத்தால் டெல்லியில் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டது. அதேபோல், தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாட்டை விதித்திருந்தபோதிலும் டெல்லியில் மாசு குறைந்தபாடில்லை.

இந்தச் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மனிதர்களுடன் அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளும் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளன. நாய்களின் மூச்சுத்திணறலுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள கால்நடை மருத்துவ நிலையம் ஒன்று கூறியுள் ளது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைக் காட்டிலும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய், குரங்குகள், மாடுகள் போன்ற பிராணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தாக விலங்குகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.