சென்னை: புதுச்சேரி தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், திரு வாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வரை தமிழகத்தின் 7 மாவட்டங்களையும், காரைக்கால் பகுதியையும் புயல் தாக்கும் என்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
புயல் தாக்கும் என அறிவிக்கப் பட்ட ஏழு மாவட்டங்களிலும் புதுவை, காரைக்காலிலும் மித மிஞ்சிய கனமழை பெய்யும் என்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போதும் கரையைக் கடந்த பின்பும் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கனமழை நீடிக்கும். இந்த 7 மாவட்டங்களிலும் சேதம் கடுமை யாக இருக்கும் என்றும் அஞ்சப் படுகிறது.
நாகை, வேதாரண்யம் ஆகிய ஊர்கள் புயல் தாக்கும் மையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் எழும்புவதால் நீர் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் கடலோர மாவட்டங் களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஏராளமான புயல் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகள் செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்களில் குறைந்த நேரத் தில் 20 செ.மீ. வரை அதிக அளவு மழை கொட்டும் வாய்ப்புள்ளது. கஜா புயலையொட்டி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் = கன் னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராமேசுவரம் - மானாமதுரை இடையே ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம் - திருப்பதி எக்ஸ் பிரஸ், ராமேசுவரம் - ஏக்கா (குஜராத்) செல்லும் ரயில்கள் ராமேசுவரம் - மதுரை இடையே யான ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எண்ணூர், கடலூர், புதுவை, காரைக்கால், நாகை, பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி துறை முகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.

