சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரிவுபசார விழா வில் பேசிய நீதிபதி சத்ருகன் புஜ்ஹரி, தமிழர்களை விட்டு பிரிந்துசெல்லவே எனக்கு மனம் வரவில்லை என்று கண்ணீர்மல்க கூறினார். "தமிழர்கள் விருந்தோம் பலில் சிறந்தவர்கள். நல்ல எண்ணம் கொண்டவர்கள். இங்குள்ள பலர் எனக்குப் பலவிதத்தில் உதவிகரமாக இருந்துள்ளனர். அவர்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது," என நீதிபதி சத்ருகன் புஜ்ஹரி பிரிவுபசார விழாவில் கண் கலங்கி உருக்கமாகப் பேசினார். இதனால் அரங்கம் சிறிது நேரம் அமைதியானது. ஒடிசா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சத்ருகன் புஜ்ஹரி, சென்னை உயர் நீதிமன்றத்துக்குக் கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இப்போது அவரை மீண்டும் ஒடிசா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி அதிபர் உத்தரவிட் டுள்ளார்.
'தமிழர்கள் மிக நல்லவர்கள்' என்று கூறி கண்ணீர் சிந்திய நீதிபதி
1 mins read

