துணை முதல்வர்: தமிழகத்தில் ஐந்து லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதி

1 mins read

சென்னை: குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தமிழகத்தில் சுமார் ஐந்து லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 'நகரங்கள் மறுநிர்மாணம்' என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஓ.பன்னீர் செல்வம் பேசியபோது, "இந்தியா விலேயே அதிக நகர்ப்புறங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப் பின்படி தமிழகத்தில் 48.5% பேர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

"சென்னை, கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களில்தான் நகர்ப்புற மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தமிழ கத்தை குடிசைப் பகுதி இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு 25 லட்சம் வீடுகள் கட்டவேண்டிய தேவை உள்ளது. "அவற்றில் 14 லட்சம் வீடுகள் நகர்ப்புறங்களில் கட்டப்படவேண் டும். அதில் முதல்கட்டமாக 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி இப்போது வழங்கப்பட் டுள்ளது," என்றார் ஓ.பன்னீர் செல்வம்.