பழவூர்: சிவன் சொத்து குலநாசம் என்று பொதுவாகக் கூறுவதுண்டு. இதுபோல் கோயில் சிலைகளைத் திருடி வெளிநாட்டுக்கு கடத்திய வர்கள் ஒருவர் மாற்றி ஒருவராகப் போலிஸ் கையில் சிக்கி வருகின் றனர். இந்த வரிசையில் இப்போது கைதாகி உள்ளார் போலிஸ் அதி காரி ஜீவானந்தம். திருநெல்வேலி மாவட்டம், பழ வூரில் பழமையான நாறும் பூநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயி லில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டு ரூ.24 கோடி மதிப்புள்ள 13 சாமி சிலைகளைத் திருடி வெளிநாட்டிற்கு கடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்ட போலிஸ் துணைக் கண்காணிப் பாளர் ஜீவானந்தத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சிலை திருட்டுச் சம்பவம் நடைபெறும்போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக இருந்த காசிப், காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளராக இருந்த ஜீவானந்தம் ரூ.24 கோடி கோயில் சிலை திருடிய போலிஸ்காரர் கைது ஆகியோர் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் வகையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு செயல் பட்டிருப்ப தும் உண்மைகளை மறைத்து நீதி மன்றத்துக்கு தவ றான தகவலை அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களில் ஜீவானந்தம் திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண் காணிப்பாளராக அண்மையில் பணிபுரிந்து வந்தார், காசிப் ஓய்வு பெற்றுவிட்டார். ஏற்கெனவே ஒரு சிலை திருட்டு வழக்கில் தொடர்பு இருந்ததால் காதர் பாட்ஷா பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜீவானந்தம் கைதா னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

