தாம்பரம்: சென்னையில் படிக்கும் ஒருசில கல்லூரி மாணவர்களி டையே வானில் பறப்பது போன்ற உணர்வைத் தரும் கஞ்சா போதைப் புழக்கம் அதிகரித்திருப் பதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளியே கசிந்தால் தங்கள் கல்லூரியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கருதி கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடிமறைத்து வருவ தாக ஊடகத் தகவல்கள் குறிப் பிட்டுள்ளன. மாணவர்களின் பொன்னான எதிர்காலத்தை பாழாக்கும் இந்த கஞ்சா விற்பனையை முழுவது மாக தடுத்து நிறுத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம் பொதுமக்களும் பெற்றோர்களும் கஞ்சா பழக்கத் தின் கொடுமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளைத் தீவிர மாகக் கண்காணித்து அவர் களுக்கு அந்தப் பழக்கம் இருந் தால் மருத்துவர்களிடம் அழைத் துச்சென்று 'கவுன்சிலிங்' செய்து அவர்களை மீட்கவேண்டும் என வும் சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். "சென்னைப் புறநகர்ப் பகுதி களில் உள்ள முக்கிய கல்லூரி களில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.
கல்லூரி மாணவ, மாணவிகள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். "பெரும்பாலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. "இவர்கள் மட்டுமின்றி ஏராள மான இளைஞர்களும் சென்னைப் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிக் கரைகள், மலைப்பகுதி, காப்பு காடு பகுதிகளில் கூட்டமாக கஞ்சா புகைப்பதைக் காண முடி கிறது. "வட சென்னைப் பகுதிகளைச் சேர்ந்த கஞ்சா மொத்த வியா பாரிகள் மூலம் சென்னையின் பல பகுதிகளுக்கும் கஞ்சா சில்லறை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

