சாதனைகளைத் தகர்த்தெறிந்த பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்

சாதனைகளைத் தகர்த்தெறிந்த பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்

1 mins read

சிட்டகாங்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்ளாதேஷ் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் (படம்) முந்திய வீரர் களின் சாதனைகளைத் தகர்த் தெறிந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் 64 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் பங்ளாதேஷ் வென்றது. இந்தப் போட்டியில் பங்ளா தேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் இரட்டை சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதாவது 54 டெஸ்ட் போட் டிகளில் 200 விக்கெட்டுகள், 3000 ஓட்டங்கள் என்ற இரு சாதனைகளையும் எட்டியுள்ளார். இதன் மூலம் கபில், போத்தம், பிளிண்டாஃப், கெய்ன்ஸ் போன்ற வர்களின் சாதனைகளை உடைத் துள்ளார்.

போத்தம் 55 போட்டிகளிலும் கெய்ன்ஸ் 58 போட்டிகளிலும் பிளிண்டாஃப் 69 போட்டிகளி லும் கபில்தேவ் 73 டெஸ்ட்களி லும் இச்சாதனையை எட்டினர். சிட்டகாங் டெஸ்ட் போட்டி யின் 2வது இன்னிங்சில், கெய்ரல் போவெல் விக்கெட் ஷாகிப் அல் ஹசனின் 200வது விக்கெட்டாகும். இரு அணிகளுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 30ஆம் தேதி தொடங்கும்.