கர்நாடகாவில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து 28 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து 28 பேர் உயிரிழப்பு

2 mins read

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நேற்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. நேற்று பிற்பகல் பாண்டவபுரம் அருகே அப்பேருந்து சென்று- கொண்டிருந்தபோது திடீரென அதன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில் அது சாலை ஓரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து மூழ்- கியதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. கால்வாய்க்குள் பாய்ந்த அப்பேருந்து பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், அது முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது.

அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டுக் கரை சேர்க்க முற்பட்டனர். ஆனால், ஒருவரையும்கூட அவர்களால் உயிருடன் மீட்க முடியவில்லை. நீச்சல் தெரிந்த சிறுவன் ஒருவன் மட்டுமே நீரில் நீந்தி கரைசேர்ந்ததாகக் கூறப்பட்டது. நீச்சல் தெரியாத வர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பா- லானோர் பள்ளி மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மூத்த போலிஸ் அதிகாரிகளும் தீ அணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களும் உயிரிழந்த- வர்களின் சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

"பேருந்தில் இருந்தவர்கள் எல்லாரும் உயிரிழந்துவிட்டதால் பலி எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. உயிர் பிழைத்த சிறுவன் மட்டுமே எங்களுக்கு தகவல்களை வழங்க முடியும். ஆனால் அவன் தற்போது அதிர்ச் சியில் உறைந்துபோய் உள்ளான்," என்று போலிஸ் அதி- காரி ஒருவர் தெரிவித்ததாக தக வல்கள் தெரி விக்கின்றன. தற்போது மாண்டியாவில் உள்ள கர்நாடக முதல்வர் எச்.டி. குமார சாமி, விபத்து நிகழ்ந்த இடத் திற்குச் சென்று பார்வை- யிடுவார் என்றும் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.