கஜா புயல்: ஆய்வு தொடர்கிறது

1 mins read
2275cb28-ed2a-4a22-afd3-ba0fe05c96b3
-

சென்னை: தமிழ்நாட்டில் இந்த மாதம் 16ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வீசிய கஜா புயல் எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற் படுத்தி இருக்கிறது என்பதை நேரடியாக மதிப்பிட தமிழகம் வந்துள்ள எழுவர் அடங்கிய குழு இன்று நாகப்பட்டினம் பகுதிகளில் ஆய்வுகளை நடத்த இருக்கிறது. அந்தக் குழு சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டத் தில் பல பகுதிகளுக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டது. வீடுவீடாக அதிகாரிகள் சென் றனர். நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பல இடங்களுக் கும் சென்று மக்களைச் சந்தித்து சேதங்களைப் பார்வையிட்டனர்.

ஆய்வுக் குழுவினருக்குச் சில இடங்களில் எதிர்ப்பு இருந்ததாக வும் சில இடங்களில் அதிகாரி களைப் பார்த்ததும் மக்கள் தங்க ளுக்குப் பிழைக்க இனி வழி இல்லை என்று கதறிகதறி அழுத தாகவும் தகவல்கள் தெரிவித்தன. மதிப்பீட்டு ஆய்வுகளைத் தொடங்குவதற்கு முன்பாக மத்தியக் குழுவினர் தமிழக முதல் வர் எடப்பாடியைச் சந்தித்தனர். புயல் சேதம் பற்றி அவர்களுக்கு எல்லாவற்றையும் முதல்வர் எடுத் துக் கூறினார். இந்த நிலையில், புயல் நிவா ரணப் பணிகளுக்காக மத்திய அரசு முதற்கட்டமாக தமிழக மின் வாரியத்திற்கு 200 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக அத்துறையின் அமைச்சர் தங்கமணி நேற்றுத் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் என்ற ஊரில் சனிக்கிழமை மத்தியக் குழுவினர் வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தினர். படம்: தமிழக ஊடகம்