சென்னை: அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அல்லது அமமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்ய டிசம்பரில் நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில், வாக் கெடுப்பு நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். தேர்தல் பணிகளை பாமக தொடங்கி இருக்கிறது. எந்தெந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என ராமதாஸ் ஆய்வு செய்து வருகிறார். ஆனால் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணிக்குத் தனித்துப் போட்டியிட விருப்பமில்லை. அவர் திமுக அல்லது அமமுக கூட்டணியில் சேர விரும்புகிறார்.
அவரைப் போலவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் கூட் டணி வேண்டும் என விரும்புகின்றனர். கடந்த 2009 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பாமக படுதோல்வி அடைந்தது. அதேபோல் 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றில் மட்டும் பாமக வெற்றிபெற்றது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, தர்மபுரி யில் மட்டும் வெற்றி பெற்றது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தலில் நான்கு, ஐந்து முனைப் போட்டி உருவாகும்பட்சத்தில், தனியாக போட்டி யிட்டாலும் வெற்றி பெறலாம் என பாமக நம்புகிறது. எனவே கூட்டணி குறித்து நிதானமாகத்தான் முடிவெடுக்கவேண்டும் என்று ராமதாஸ் கருதுகிறார்.
ஆனால் அன்புமணியோ, கூட்டணி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில் திமுக அல்லது தினகரனின் அமமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் சேரலாம் என்பது குறித்து முடிவுசெய்ய, ராமதாஸ் விரும்பு கிறார். அதற்காக அடுத்த மாதம் சென் னையில் நடக்கவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில், பெட்டி வைத்து உறுப்பினர் களிடம் வாக்கெடுப்பு நடத்த ராமதாஸ் திட்டமிட்டு உள்ளதாக கட்சி வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

