வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அந்தகத்துறை பகுதியில் வீட்டில் பீரோ விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. குடிக்க மனைவி பணம் தரமறுத்ததால் ஆத்திர மடைந்த கணவர் ரமேஷ் பீரோவை கீழே தள்ளிவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது. வீட்டிலிருந்த பீரோவை ரமேஷ் தள்ளிவிட்டதில் மூன்று வயது குழந்தை புவனேஸ்வரி பீரோவின் கீழே மாட்டிக்கொண்டார். குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
குடிகார கணவன் தள்ளிவிட்ட பீரோ விழுந்து வீட்டில் குழந்தை மரணம்
1 mins read

