மூன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடிபட்டனர்

மூன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடிபட்டனர்

1 mins read

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரையொட்டி உள்ள கோதிபாக் என்ற இடத்தில் டெல்லி சிறப்பு போலிஸ் படையினரும் காஷ்மீர் போலிஸ் படையினரும் சனிக்கிழமை மூன்று பேரைக் கைதுசெய்தனர். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது. அந்த மூவரிடம் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைநகர் புதுடெல்லியில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள் என்பதும் அம்பலமாகி இருக்கிறது.