கறுப்புப் பணத் தகவலை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு

1 mins read

புதுடெல்லி: இந்தியர்கள் வெளி நாடுகளில் பதுக்கி இருக்கும் கறுப்புப் பணத்தில் எவ்வளவு பணம் இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை வெளியிடும்படி மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் அத் தகவலை வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் திட்ட வட்டமாக மறுத்துவிட்டது. கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணை நடத்த பிரதமர் அலு வலகம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. அக்குழு இப்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கறுப்புப் பணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் பற்றியும் திருப்பிக் கொண்டுவரப்பட்ட கறுப்புப் பணத் தகவல்களையும் இப்போது வெளி யிட்டால் விசாரணை பாதிக்கப் படும் என்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க இயலாமல் போய்விடும் என்றும் பிரதமர் அலுவலகம் விளக்கியது. அதேபோல் மத்திய அமைச்சர் களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டு உள்ள ஊழல் புகார்கள் குறித்த விவரங்களையும் வெளியிட முடி யாது என்றது பிரதமர் அலுவலகம். இந்திய வனத்துறை அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி என்பவர், இவற்றை எல்லாம் வெளியிடும் படி கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் 2014ஆம் ஆண்டு ஜன வரி முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.