பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100,000 என சப்பாத்தி தயாரித்து வழங்கிய இளையர்கள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100,000 என சப்பாத்தி தயாரித்து வழங்கிய இளையர்கள்

2 mins read
2db18680-0084-400b-8c9c-4a7d91ee6220
-

ஈரோடு: புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், நாகை, புதுக் கோட்டை மாவட்ட கிராமப்பகுதி மக்களுக்காக 10,000 சப்பாத்தி களைத் தயார் செய்து இளைஞர்கள் வேன்மூலம் அனுப்பி வைத்தனர். இதேபோல் திருப்பூர் மேற்கு ரோட் டரி சங்கத்தின் இளையர்களும் ஒரு லட்சம் சப்பாத்திகளைத் தயாரித்து உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவி உள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க 10,000 சப்பாத்திகள் தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம், நம்பியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நம்பியூரையும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கோசணம், மலையப்பாளையம், சாவக்கட்டு பாளையம், வேமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் இளையர்களும் இரண்டு நாட்களாக ஆர் வத்துடன் சப்பாத்திகள் செய்தனர். நம்பியூர் வட்டார மக்களின் உதவியுடன் கஜா புயல் சேதப் பகுதிகளான வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை உள்பட மாவட்ட கிராமப் பகுதி மக்களுக்கு அரிசி, ரொட்டி, தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்குப் பால் பவுடர், பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகு வத்தி போன்ற பொருட்கள் அனைத்தும் வேன் மூலம் விநி யோகம் செய்யப்பட்டது.

இதேபோல் கஜா புயல் பாதிப் பால் அவதிப்படும் மக்களுக்கு உதவ திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தினர் ஒரு லட்சம் சப்பாத்தி களைத் தயாரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். மங்கலம் அருகிலுள்ள மேற்கு ரோட்டரி மகாலில் சப்பாத்தி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. "தலா நான்கு வீதம் பொட்டலம் கட்டப்பட்டு 20 பேர் கொண்ட குழுவினர் மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்கிறோம்," என்று மேற்கு ரோட்டரி தலைவர் பால சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஒரு லட்சம் சப்பாத்தி தயாரித்து அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தினர். படம்: தமிழக ஊடகம்