டேனியல் ரிச்சர்ட்: புயல் பாதிப்பு நெஞ்சைப் பிழிந்தது

டேனியல் ரிச்சர்ட்: புயல் பாதிப்பு நெஞ்சைப் பிழிந்தது

2 mins read
d47d8800-cd40-483e-8c02-13e96f995bdd
-

நாகப்பட்டினம்: சுழன்றடித்த கஜா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டப் பகுதிகளுக்கு அடுத் தடுத்து பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவின் தலைவர் டேனியல் இ ரிச்சர்ட், மாவட்டங்கள் பலவற்றி லும் பரவலாகத் தென்பட்ட புயல் பாதிப்பு தனது நெஞ்சைப் பிழிந்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். "கஜா புயல் பாதிப்பை ஏனோ தானோ என்று சர்வ சாதாரண மாகக் கருதிவிடமுடியாது. உண்மையிலேயே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது," என்று ரிச்சர்ட் மேலும் கூறினார்.

கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக டேனியல் ரிச்சர்ட் தலைமையில் எழுவர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. மூன்றாவது நாளான நேற்று மத்திய குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட னர். "நானும் உங்களைப் போலவே ஒரு சராசரி மனிதன் என்ற முறையில் கஜா புயலால் ஏற் பட்டுள்ள இழப்புகளைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தேன்," என்றார் ரிச்சர்ட். வேதாரண்யம், விழுந்தமாவடி, வேட்டைக்காரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர், சேதத்தை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர். அதன்பின்னர் காரைக்காலில் ஆய்வு நடத்தினர்.

நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் ரிச்சர்ட், "கஜா புயல் பாதிப்புகளை வார்த்தை களால் விவரிக்கமுடியாது. பாதிக் கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நிச் சயமாக நிவாரணம் கிடைக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை களால் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டுள்ளது. புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது; சீரமைப்பு மேற்கொள்ள நீண்ட காலம் தேவைப்படுகிறது. "இந்த சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்," என்றார்.

கஜா புயலால் தென்னை, நெற்பயிர் உள்ளிட்ட தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளதாகக் கூறிய மக்கள் தங்களது முன்னேற்றகரமான வாழ்க்கை பாணி 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக ஆய்வு நடத்த வந்த மத்திய குழுவினரிடம் கூறி வருந்தினர். படம்: ஊடகம்