மாயமான செருப்பைத் தேடிவரும் காவல்துறை

1 mins read

சென்னை: காணாமல்போன செருப்பு போனால் போகட்டும் என்று நினைக்காத ஒருவர் இந்த விஷயத்தை சும்மா விட்டுவிடாமல் காவல் நிலையத்தில் தனது செருப் பைக் கண்டுபிடித்துத் தரு மாறு புகார் அளித்துள்ளார். சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவர் பாரிசில் இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடையை வைத்துள் ளார். இவர் நீரிழிவு நோயை பரிசோதனை செய்து கொள் வதற்காக அருகே உள்ள பரிசோதனை நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை முடிந்து திரும்பி வந்தவர், வாசலில் விட்டுச்சென்ற செருப்பை அணிவதற்காகப் பார்த்தபோது, அவரது செருப்பு மாயமாகியிருந்தது. 800 ரூபாய் கொடுத்து அந்த செருப்பை வாங்கி இரண்டு நாட்களே ஆகிறது என்று கூறிய ராஜேஷ், செருப்புதானே என்று நான் இந்த விஷயத்தை அலட்சிய மாக விட்டுவிட விரும்ப வில்லை. அதனால்தான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார். தண்டையார் பேட்டை காவல்துறையினரும் செருப்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.