புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை

புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை

1 mins read

சென்னை: கஜா புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக ஆய்வு மேற் கொண்ட மத்திய குழுவினர், நேற்று பிற்பகல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புயல் பாதிப்பு குறித்தும் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகை ஆகிய மாவட்டங் களில் ஆய்வு செய்து சேகரித்த சேத விவரங்கள் குறித்து அறிக் கையாக அவர்கள் மத்திய அர சிடம் சமர்ப்பிக்க உள்ளனர். கஜா புயலின் கோரத் தாண்ட வத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்ர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20ஆம் தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற அவர்கள், மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங் களுக்கான பயணத் திட்டம் திடீ ரென பாதியில் ரத்தானது.