புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என ஆர்டிஐ மூலம் கேட்ட கேள் விக்கு உள்துறை அமைச்சு பதில் அளித்துள்ளது. இந்த எழுவரின் தண்டனை யைக் குறைப்பது தொடர்பாக மாநில அரசு எடுத்த முடிவை தடுக்கும் வகையில் எந்த விதியும் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் எழுவரை விடுதலை செய்வது தொடர் பான மாநில அரசின் முடிவில் மத்திய அரசு தலையிட முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறி வாளன் உள்ளிட்ட எழுவர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
'எழுவர் விடுதலையில் மத்திய அரசு தலையிடாது'
1 mins read

