ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுநாள் கிராமத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பாலிஸ் போடுவதாகக் கூறி வந்த வடமாநில இளைஞரை முதுநாள் கிராம மக்கள் பிடித்து அடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலிசார் விசாரணையின் போது அந்த இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று முதுநாள் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, மாயகிருஷ்ணன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லாத இருவரை காவலர்கள் கைது செய்துள்ளதாகவும் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொய் வழக்கில் இருவர் கைது; போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்
1 mins read
-

