ருமேனியா ஏடிஎம் கொள்ளையர்கள் கைவரிசை; போலிஸ் வலையில் சிக்கினர்

ருமேனியா ஏடிஎம் கொள்ளையர்கள் கைவரிசை; போலிஸ் வலையில் சிக்கினர்

1 mins read
6dc83ff3-d59d-4edd-a98c-b4387ae7e422
-

ஆலந்தூர்: ருமேனியாவில் இருந்து மீண்டும் கொள்ளையடிப்பதற்காக சென்னை வந்தபோது போலிசில் வசமாக சிக்கிக்கொண்டோம் எனக் கைதான வெளிநாட்டுக் கொள்ளை யர்கள் போலிசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னையை அடுத்த மடிப்பாக் கத்தில் ஏடிஎம் அருகே நின்ற ருமே னியா நாட்டைச் சேர்ந்த நிகோலாய் கியம்லிசி, 35, செர்சி ஜார்ஜ், 36, ஆகியோரை மடிப்பாக்கம் போலிசார் கைது செய்தனர். வெளிநாட்டு ஏடிஎம் கொள்ளை யர்களான இருவரும் ஏற்கெனவே பெருங்குடியில் கொள்ளையடித்து விட்டு ருமேனியா சென்றுள்ளனர்.

"சென்னையில் நவீன கருவி களின் உதவியுடன் போலி அட்டை களைத் தயாரித்து ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடித்தோம். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தோம். காவல் துறையினடம் மட்டும் பிடிபடா விட்டால் போலி ஏடிஎம் அட்டைகள் மூலமாக பெருந்தொகையைக் கொள்ளையடித்து விட்டு ஒரு வாரத்தில் ருமேனியாவுக்குத் தப்பியிருப்போம்," என்றனர்.