திருவண்ணாமலை: சிறு குழந்தை முதல் தங்களை வளர்த்து ஆளாக் கிய பெற்றோரை அவர்களது அந்தி மக் காலம் வரை பராமரிக்கும் பொறுப்பை பெரும்பாலான பிள்ளை கள் ஏற்கின்றனர். இப்படி தங்களது பிள்ளைகளும் தங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம் பிக்கையில் சொத்துகளைப் பிள்ளை களுக்கு எழுதிக்கொடுத்த பெற் றோர்களுக்குச் சோறுபோடாமல் அவதிப்பட வைத்துள்ளனர் அவர் களது பிள்ளைகள். இந்தச் சம்பவம் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி யின் கவனத்துக்கு வர, அவர் பிள் ளைகளிடம் கொடுக்கப்பட்ட நிலத்தை மீட்டு மீண்டும் அதைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்து அதி ரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மகன்களுக்கு எழுதிக்கொடுத்த பத்திரப் பதிவை ரத்து செய்ய ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார். அத்துடன், வயதான பெற்றோர் களை நேரில் அழைத்து நிலப் பட்டாவை ஆட்சியர் வழங்கினார். "மகன்களால் மீண்டும் தொந் தரவு ஏற்படுமானால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். வயதான காலத்தில் பெற்றோர்களைப் பாதுகாக்க வேண்டியது பிள்ளை களின் கடமை. பெற்றோர்களைப் பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு இந்தச் சம்பவம் சரியான பாடமாக இருக்கும்," என்றார் கந்தசாமி. திருவண்ணாமலை மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பூங்கா வனம். கண்ணன் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை தனது இரு மகன்களுக்கும் எழுதிவைத்தார். நிலத்தைப் பெற்றுக்கொண்ட இரு மகன்களும் பெற்றோர் களுக்கு சோறு போடுவதற்குக் கூட மனமின்றி அவர்களைப் பார்ப்பதையே தவிர்த்து வந்தனர்.
"60 சென்ட் நிலத்தையாவது இருவரும் எங்களிடம் கொடுங் கள், அதை வைத்து நாங்கள் பிழைப்பை ஓட்டுகிறோம்," என்று பெற்றோர்கள் கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர்களின் இளைய மகன் செல்வம் தந்தையை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக பெற்றோர் முறையிட்டனர்.
நிலத்தை பிள்ளைகளின் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு சோற்றுக்குக் கூட வழியின்றி பரிதவித்து வந்த பெற்றோர் கண்ணன், பூங்காவனம். படம்: ஊடகம்

