ஐராவதம் மகாதேவனுக்கு நினைவஞ்சலி நிகழ்வு

ஐராவதம் மகாதேவனுக்கு நினைவஞ்சலி நிகழ்வு

1 mins read
de3f7cee-f5a4-4d47-ba16-31860f7f4406
-

தர்மபுரி: காலஞ்சென்ற தொல்லியல் அறிஞரும் தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன்(படம்) மறைவையடுத்து அவரது நினைவேந்தல் நிகழ்வு தர்மபுரியில் நடைபெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு மறைந்த அறிஞரின் நினைவுகளை அசைபோட்டு, புகழஞ்சலி செலுத்தினர். ஐராவதம் மகாதேவன் தமிழனின் தனித்துவத்தை நிலைநாட்ட பாடுபட்டவர் என இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த மாநில தொல்லியல் துறை இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பிரமணியன் குறிப்பிட்டார். "தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெறவேண்டும் என்பதற்காக உழைத்தவர் ஐராவதம் மகாதேவன். சிந்துவெளி நாகரிகம் குறித்த ஆய்வில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். "113 தமிழ் பிரமி கல்வெட்டுகளை ஆய்வு செய்து நூல் வெளியிட்டவர். இனம், அரசியல் கடந்து அறிவியல் கண்ணோட்டத் துடன் ஆய்வுகளை மேற்கொண்டவர். "அவரது மறைவானது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரிழப்பு என்பதே உண்மை," எனப் பாராட்டினார் சுப்பிரமணியன்.