அனைவருக்கும் உரிய நிவாரணம்

அனைவருக்கும் உரிய நிவாரணம்

2 mins read

வழங்க முதல்வர் உறுதி நாகை: கஜா புயலால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க போர்க்கால அடிப்படை யில் பணிகள் நடைபெற்று வருவ தாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்டவர் களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், ஒரு கோடி ரூபாய் மதிப் புள்ள நிவாரண உதவிகளையும் பலருக்கும் வழங்கி ஆறுதல் கூறினார். பொதுமக்களில் ஏராளமானோர், குறிப்பாக பெண்கள் புயலால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைக் கண்ணீர் மல்க விவரித்தனர். அப்போது அவர் களுக்கு மத்தியில் பேசிய பழனி சாமி புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங் கப்படும் என உறுதி அளித்தார்.

நாகை மாவட்டம்தான் கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "பாதிக்கப்பட்ட அனைவருக் கும் நிவாரண உதவிகள் கிடைப்ப தற்கு ஏற்பாடு செய்யப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம், குடிநீர் விநியோகம் இடைவெளி இல்லாமல் வழங்கப் படும். அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பணி கள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த குடிசை வீடுகளுக் குப் பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்," என்று முதல்வர் உறுதியளித்தார். இதற்கிடையே சில பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்ற அவர், அங்கு தங்கியிருப்ப வர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது நிவாரணம் வழங்குவ தில் அரசு பாரபட்சம் காட்டாது என்றார். "உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். பாதிக்கப்பட்ட அனைவ ருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்குவோம். மின்கம்பங்கள் நடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது," என்றார் பழனிசாமி.