நகரி: ஆந்திர அரசின் கடும் எச்சரிக்கையையும் மீறி அங்கு செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திர போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் சிக்கியது. கைதான நால்வரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான 9 பேருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து சித்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது
1 mins read

